திட்டக்குடி அருகே அரசுப் பேருந்து வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை தாண்டி 2 கார்கள் மீது மோதி விபத்து 9 பேர் பலி
திட்டக்குடி அருகே அரசுப் பேருந்து வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை தாண்டி 2 கார்கள் மீது மோதி விபத்து 9 பேர் பலி
திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு நடந்த கோர விபத்தில், சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை தற்போது 9 ஆக அதிகரித்துள்ளது.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து (SETC), கடலூர் மாவட்டம் எழுத்தூர் என்ற இடத்தில் வந்தபோது அதன் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரைத் (Median) தகர்த்துக்கொண்டு எதிர் திசையில் பாய்ந்தது. அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற இரண்டு கார்கள் மீது பேருந்து நேரடியாக மோதியது.
அதில் பயணித்த 7 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.டயர்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
மீட்புப் பணி: காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் உருக்குலைந்த கார்களை அகற்றி, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.டயவிபத்து காரணமாக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டிருந்த சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
