Breaking News

ஜனவரி 1 முதல் தென் மாவட்ட ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - புதிய அட்டவணை இதோ

அட்மின் மீடியா
0
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் வரும் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகிறது !! புதிய அட்டவணை




டிசம்பர் 31 வரை இப்போது உள்ள அட்டவணை தான் தொடரும் ஜனவரி 1 முதல் தான் நாம் கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணை துவங்கும் !!

சென்னை எழும்பூரில் புறப்படும் நேரம் 

✓ 12631 || சென்னை திருநெல்வேலி நெல்லை 
இரவு 08:40 மணிக்கு பதில் இரவு 08:50

✓ 22675 || சென்னை திருச்சி சோழன் SF
காலை 07:45 மணிக்கு பதில் காலை 08:00

✓ 16127 || சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ் 
காலை 10:20 மணிக்கு பதில் காலை 10:40

✓ 12661 || சென்னை செங்கோட்டை பொதிகை
இரவு 08:10 மணிக்கு பதில் இரவு 07:35 

✓ 16751 || சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
இரவு 07:15 மணிக்கு பதில் இரவு 08:35

✓ 12693 || சென்னை தூத்துக்குடி முத்துநகர் 
இரவு 07:30 மணிக்கு பதில் இரவு 07:15

✓ 12635 || சென்னை எழும்பூர் மதுரை வைகை
மதியம் 01:45 மணிக்கு பதில் மதியம் 01:15

✓ 20665 || திருநெல்வேலி வந்தே பாரத்
பிற்பகல் 02:45 மணிக்கு பதில் மாலை 03:05 

✓ 22661 || சென்னை இராமேஸ்வரம் சேது 
மாலை 05:45 மணிக்கு பதில் மாலை 05:55


எனவே ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு ரயில் பயணங்களை துவங்கக்கூடிய பயணிகள் மாற்றங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு உங்கள் பயணங்களை துவங்குங்கள் 

நெல்லை எக்ஸ்பிரஸ்

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12632), தற்போது இரவு 8.40 மணிக்கு புறப்படுகிறது. ஜனவரி 1 முதல், இந்த ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக, அதாவது இரவு 8.50 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்

செங்கோட்டையில் இருந்து எழும்பூருக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 12662), தினமும் மாலை 6.45 மணிக்கு புறப்படுகிறது. புதிய அறிவிப்பின்படி, ஜனவரி 1 முதல் மாலை 6.50 மணிக்கு இந்த ரயில் புறப்படும். மறுநாள் சென்னை எழும்பூரை வழக்கத்தை விட முன்னதாகவே, அதாவது காலை 5.55 மணிக்கே சென்றடையும்.

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்

தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 12694), தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்படுகிறது. வருகிற 1-ந்தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து இரவு 9.05 மணிக்கு ரயில் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ்

செங்கோட்டை மற்றும் தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16102) ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் இந்த ரயில், ஜனவரி 1 முதல் காலை 6.05 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சேது எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22662) 

வழக்கமாக இரவு 8.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, இனி இரவு 9.10 மணிக்கு புறப்படும். ​ராமநாதபுரம்: இரவு 10 மணி. ​பரமக்குடி இரவு 10.30 மணி. ​மானாமதுரை இரவு 10.50 மணி. ​காரைக்குடி இரவு 11.55 மணி. ​திருச்சி அதிகாலை 1.35 மணி. இந்த ரயில் சென்னைக்கு, வழக்கமான நேரத்தை விட 10 நிமிடங்கள் தாமதமாக, அதாவது காலை 7.20 மணிக்கு சென்றடையும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback