Breaking News

1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது நட்சத்திர விடுதிகளுக்கு போலீஸார் கட்டுப்பாடு மீறினால் கடும் நடவடிக்கை

அட்மின் மீடியா
0

1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது நட்சத்திர விடுதிகளுக்கு போலீஸார் கட்டுப்பாடு மீறினால் கடும் நடவடிக்கை


2026 புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள் செய்து வருகின்றன. டிசம்பா் 31-ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி அடுத்த நாள் (ஜன. 1) அதிகாலை 1 மணி வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தவிா்ப்பதற்காக காவல் துறை பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனையிட்டு பதிவு செய்வது, 

அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, 

நிகழ்ச்சி மற்றும் விருந்து நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, 

கேளிக்கை நிகழ்ச்சிக்காக தற்காலிக மேடைகள் அமைத்தல், அந்த மேடையின் உறுதித்தன்மை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் தகுதிச் சான்றிதழ் பெறுவது,

நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட அரங்கத்தில் மட்டுமே புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவது 

1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது 

உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், நீச்சல் குளத்துக்கு செல்லும் வழிகள் அனைத்தும் அடைத்து வைப்பது, வாகனங்களை அந்தந்த ஹோட்டல்களின் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்துவது, 

சாலைகளில் எக்காரணம் கொண்டும் வாகனங்கள் நிறுத்தக் கூடாது, 

மதுபானங்கள் அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்திலேயே பரிமாறுவது, 

உணவு மற்றும் மதுபான சேவையை அதிகாலை 1 மணிக்குள் முடித்துக் கொள்வது,

காவல் துறையால் அளிக்கப்படும் நேரக் கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றுவது, 

கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை கேலி செய்வதை தடுக்க போதுமான பாதுகாப்பு ஊழியா்களை நியமிப்பது, 

குறிப்பாக பெண் பாதுகாவலா்கள் நியமிக்க வேண்டும், வளாகத்துக்குள் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.

கட்டுப்பாடுகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். 

நட்சத்திர ஹோட்டல்களை தவிா்த்து சென்னையில் மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகிய இடங்களிலும் பொதுமக்களின் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback