Breaking News

கர்நாடகாவில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி தீ விபத்து -19 பேர் பலி நடந்தது என்ன

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி தீ விபத்து-19 பேர் பலி நடந்தது என்ன 


கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவில் உள்ள கோரலத்து கிராஸ் அருகே தேசிய நெடுஞ்சாலை 48-ல் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி நடந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.தனியார் பேருந்து விபத்து

ஹிரியூரிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைப் தடுப்புகளை(central divider) தாண்டி, எதிர் திசையில் வந்த பெங்களூரிலிருந்து சிவமொக்கா நோக்கிச் சென்ற பேருந்து மீது மோதியுள்ளது.  லாரி மோதிய வேகத்தில் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. 

விபத்து நடந்த சமயம் அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இதனால் தீ மளமளவெனப் பரவியபோது அவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது. 

இந்த பயங்கர மோதலின் காரணமாக பேருந்து நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததில், பல பயணிகள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் 19 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் இருந்து தப்பிய சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கு லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான இன்று அதிகாலையில் கர்நாடக மாநிலம் ஹிரியூர் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி தீப்பிடித்த விபத்தில், 20 பயணிகள் உயிருடன் எரிந்து சாம்பலானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback