Breaking News

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு முழு விபரம் Thiruparankundram

அட்மின் மீடியா
0

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு முழு விபரம் Thiruparankundram



திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் அசாதாரண சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

காலங்காலமாக உள்ள நடைமுறைப்படி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தர்கா அருகில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் போராட்டம்

தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கம் இட்டனர். தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 காவலர் காயம் அடைந்துள்ளார். 

தீபம் ஏற்றுவதற்காக சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தடுப்பை மீறி, மலைப் பாதையில் ஓடிச் சென்றவர்கள் பிடித்து அழைத்து வரப்பட்டனர். மலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. நாளை காலை இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடக்கவிருக்கிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback