எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டிஸ் அனுப்ப போகிறது தேர்தல் ஆணையம்.
எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டிஸ் அனுப்ப போகிறது தேர்தல் ஆணையம்.
இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன.
டிசம்பர் 14ஆம் தேதியுடன் வாக்காளர் படிவங்கள் சமர்ப்பிக்கும் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம். அந்த பட்டியலில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்தப் பட்டியலில் தகுதியுள்ள வாக்காளர்கள் எவரேனும் நீக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.மேலும் வாக்காளர் திருத்தப் பணிகளின் போது கிட்டத்தட்ட 10 லட்சம் வாக்காளர்கள், S.I.R. படிவங்களை சரியாக பூர்த்தி செய்யவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் S.I.R. படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு, அதற்கான காரணத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணியை தமிழக தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன்படி மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் இருந்து, தபால் மூலமாக வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
அனுப்பப்படும். தேர்தல் ஆணையத்திடமிருந்து வரும் நோட்டீஸ்க்கு வாக்காளர்கள் பதிலளிக்கும் வகையில், நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட 13 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ்க்கு பதிலளிக்கவில்லை என்றால் அந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்