Breaking News

08.12.2025 இன்றைய காலை தலைப்புச் செய்திகள் today headlines

அட்மின் மீடியா
0

08.12.2025 இன்றைய காலை தலைப்புச் செய்திகள் today headlines

அரசியல் லாபத்திற்காக திருப்பரங்குன்றத்தை வைத்து சிலர் மலிவான அரசியல் செய்வதாக முதலமைச்சர் கண்டனம். பெரியார் ஏற்றிய சமத்துவ தீபமே எந்நாளும் ஒளிரும் என உறுதி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி மதிப்பில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து. மதுரை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில், நாளை (09.12.2025) த.வெ.க., தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு இயக்க பொதுக்கூட்டம். காவல்துறையின் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பிரம்மாண்டமாக தயாராகிறது பொதுக்கூட்ட மைதானம்

தவெகவிற்கு விரைவில் சின்னம் கிடைக்கப் போகிறது. அதை இப்போது வெளியே சொல்ல முடியாது. அந்தச் சின்னத்தை பார்த்து நாடே வியப்படையும்.."கோபி அருகே மக்களை சந்தித்த தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேச்சு.

நடிகை பாவனா, நடிகர் திலீப் பாலியல் வழக்கு தொடர்பாக, நடிகர் திலீப் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், இன்று எர்ணாகுளம் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பைவழங்க இருக்கிறது. சுமார் ஆறரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் தொடர்ந்து ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் இண்டிகோ விமான சேவைகள் ரத்து. டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் போதிய ஏற்பாடு செய்யாததால் தவித்த பயணிகள்.தடைப்பட்டிருந்த விமான சேவைகள் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம். நாடு முழுவதும் 95 விழுக்காடு விமான சேவை இணைப்பு

டெல்லி எவ்வளவு நெருக்கடியை ஏற்படுத்தினாலும், எப்படி பந்துவீசினாலும் தமிழ்நாடு சிக்சர்தான் அடிக்கும். போட்டியில் சாம்பியன் நாங்கள்தான் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

கும்பகோணத்தில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு பிளஸ் 2 மாணவர் இறந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம். 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு, கைதான 15 மாணவர்களும் தஞ்சை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவிற்கு எதிராக திராவிட இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம். உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவி விலக வலியுறுத்தி முழக்கம்

2026 வரை அன்புமணியே பாமக தலைவர் என்ற தேர்தல் ஆணைய அங்கீகரிப்பை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பினால் வெல்லவே முடியாது - வழக்கறிஞர் கே.பாலு

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது.சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது இந்தியா. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது நடப்பு சாம்பியன் ஜெர்மனி

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback