Breaking News

தாய்க்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியது குழந்தைகளின் கடமை என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

தாய்க்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியது குழந்தைகளின் கடமை என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னானியை சேர்ந்தவர் முஹம்மது. இவர் துபாயில் பணிபுரிந்து வருகின்றார்

மேலும் இவரது மனைவியும், குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் நிலையில் இவரது பெற்றோர் தனியாக வேறொரு வீட்டில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் முஹம்மதின் தாயார் திரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் எனக்கு 60 வயது ஆகிறது. கணவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அவருக்கு அதிக வருமானம் கிடையாது. துபாயில் உள்ள மகன் எனக்கு மாதம் ரூ.25 ஆயிரம் தர உத்தரவிட வேண்டும்.என மனு தாக்கல் செய்திருந்தார் 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முஹம்மது தனது தாயாருக்கு  மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறியீடு செய்த முஹம்மது 

என் தாயார் வீட்டில் மாடுகள் வளர்க்கின்ரார் மேலும் எனது தந்தையும் சம்பாதிக்கின்றார் அதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. எனவே என்னுடைய தாய்க்கு நான் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்று குறிப்பிட்டிருந்தார். 

இதை விசாரித்த நீதிபதி கவுசர், தனது தாய் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், அதன் மூலம் தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள போதுமான வருமானம் கிடைக்கிறது என்றும் மகனின் அந்த  வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும் தனது வயதான தாயிடம், தனது வாழ்வாதாரத்திற்காக கால்நடை வளர்ப்புக்குச் செல்ல வேண்டும் என்று சொல்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் பொருத்தமற்றது. 

கால்நடை வளர்ப்பு என்பது உடல் ரீதியாக கடினமான வேலை. ஒரு வயதுக்கு மேற்பட்ட தாய் அத்தகைய உழைப்பைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மகனின் குறிப்பிடத்தக்க தார்மீக தோல்வியையும், தாயின் நல்வாழ்வு மற்றும் கண்ணியத்தை புறக்கணிப்பதையும் எடுத்துக்காட்டுகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

தந்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாய்க்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியது குழந்தைகளின் கடமையாகும் என்று கூறி தாய்க்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடு முஹம்மதுவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிமன்ற தீர்ப்பை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.livelaw.in/pdf_upload/2126000037520252-630766.pdf

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback