பிரபல சீரியல் நடிகர் பிக்பாஸ் தினேஷ் பண மோசடி புகாரில் கைது ? நடந்தது என்ன
பிரபல சீரியல் நடிகர் பிக்பாஸ் தினேஷ் பண மோசடி புகாரில் கைது
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்ற நபர் அளித்த புகாரின் பேரில், சீரியல் நடிகர் தினேஷ் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தினேஷ் ரூ.3 லட்சம் பெற்றதாகவும், ஆனால் எந்த வேலையையும் வழங்காமல் தன்னை அலைக்கழித்ததாகவும் கருணாநிதி புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், பணத்தை திருப்பி கேட்க சென்றபோது தினேஷ் தன்னை தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடிகர் தினேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தினேஷ் கூறுகையில்:-
வழக்கு தொடர்பாக வள்ளியூர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தேன். அப்பொழுது பணகுடி காவல்துறையைச் சேர்ந்த போலீசார் என்னை வழக்கு தொடர்பாக விசாரணைக்காக அழைத்துச் சென்றனர், கைது செய்யவில்லை. சம்பந்தப்பட்ட வழக்கின் ஆவணங்களை படித்து பார்த்து அதில் இருக்கும் விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தேன்,
காவல்துறையினர் என்னை விடுவித்துவிட்டனர். தேவைப்பட்டால் அழைக்கிறோம் என்று கூறினார்கள். எப்பொழுது வேண்டுமானாலும் அழையுங்கள், ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்தேன். என்று கூறினார்.
சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமான தினேஷ், பல தொடர்களில் நடித்ததுடன், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்
