Breaking News

வக்பு சொத்துக்களை உமீத் போர்டலில் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் - வக்பு வாரியம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
வக்பு சொத்துக்களை உமீத் போர்டலில் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் - வக்பு வாரியம் அறிவிப்பு


தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முத்தவல்லிகள்/நிர்வாகக்குழுவினர்கள் வக்பு நிறுவனங்களின் விபரங்களை THE UNIFIED WAQF MANAGEMENT EMPOWERMENT, EFFICIENCY, AND DEVELOPMENT ACT, 1995-σότο "UMEED CENTRAL PORTAL 2025" https://umeed.minorityaffairs.gov.in 04.12.2025 தவறாமல் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உமீத் போர்டல் (UMEED portal) என்பது இந்தியாவில் உள்ள வக்ஃப் சொத்துக்களைப் பதிவு செய்தல், சரிபார்த்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றுக்காக மத்திய அரசு தொடங்கிய ஒரு டிஜிட்டல் தளமாகும். ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development) என்பதன் சுருக்கமே உமீத் ஆகும். இது வக்ஃப் சொத்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய வக்பு (திருத்த) சட்டம் 2025-ன் படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து வக்பு சொத்துக்களையும் (நிலம், கட்டடம், தோட்டம், கடை, பள்ளிவாசல்கள், தர்கா, கபர்ஸ்தான் இடம், பள்ளிவாசல் நிலம் உள்ளிட்ட அனைத்து வக்பு சொத்துக்கள்) ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ வக்பு சொத்துகள் இணையதளத்தில் (UMEED PORTAL) கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். 

ஏற்கனவே வகுப்பு சொத்துக்கள் மாநில வக்பு போர்டில் டிஜிட்டலைஸ் செய்யப்பட்டிருந்தாலும் புதிய சட்டத்தின் படி umeed தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 

இந்தப் பதிவுக்கான இறுதி தேதி டிசம்பர் 4, 2025 (புதன்கிழமை) வரை மட்டுமே 


https://umeed.minorityaffairs.gov.in/

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback