Breaking News

பீகாரில் ஆட்சி அமைக்க போவது யார் வாக்கு எண்ணிக்கை முன்னிலை முழு நிலவரம் Bihar voting result 2025

அட்மின் மீடியா
0

பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நிறைவடைந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. Bihar voting result 2025

மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில், முதல் கட்டமாக கடந்த 6ம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 11ம் தேதி நடைபெற்றது.



பீகார் சட்டசபையில் ஆட்சியை அமைக்க 122 இடங்கள் தேவைப்படுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. - தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்படும். 

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:- காலை 10:00 நிலவரப்படி

பாஜக  கூட்டணி  159 இடங்களில் முன்னிலை

காங்கிரஸ்   80   இடங்களில் முன்னிலை

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 2 இடங்களில் முன்னிலை

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback