ரூ.1 மட்டும் போதும் மெட்ரோ, பஸ் , ரயில் என அனைத்திலும் சென்னை முழுவதும் பயணிக்கலாம் சென்னை ஒன் செயலியில் ரூ.1க்கு டிக்கெட் - புதிய அறிவிப்பு chennai one app 1 rupee offer
சென்னை ஒன்' செயலியில் ரூ.1க்கு டிக்கெட் சென்னை ஒன் செயலியில் இன்று (நவ.13) முதல் சிறப்பு சலுவை விலையான ரூ.1க்கு டிக்கெட் பெற்று பஸ், மெட்ரோ ரயிலில் ஒருமுறை பயணிக்கலாம் . BHIM Payments App அல்லது UPI மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு ரூ.1க்கு டிக்கெட் - சென்னை ஒருங்கிணைந்த மாநகப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு One Rupee Ticket offer on Chennai One app
மெட்ரோ, பஸ், மின்சார ரயில் என அனைத்து பயணங்களுக்கும் சென்னை ஒன்' செயலி மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதி உள்ளது
இந்நிலையில் சென்னை ஒன்' செயலியில், தலா 1 ரூபாய் கட்டணம் செலுத்தி மெட்ரோ, மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் ஒரு முறை சலுகை பயணம் செய்யும் புதிய சலுகை, நாளை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை ஒன்' செயலியை, கடந்த செப்., 22ம் தேதி, அறிமுகமான நிலையில் இந்த செயலியை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய சலுகை, நாளை முதல் அறிமுகமாக உள்ளது.
அதன்படி, பி.எச்.ஐ.எம்., எனப்படும், 'பீம், நேவி' செயலிகளை பயன்படுத்தி, யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்துவோர், மெட்ரோ ரயில், எம்.டி.சி., பேருந்துகளின் டிக்கெட்டை, 1 ரூபாய் செலுத்தி, முதல் முறை மட்டும் பயணம் செய்யலாம்.
விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயிலில் செல்ல, 40 ரூபாய் கட்டணம். சென்னை ஒன் செயலியை பயன்படுத்தி, பீம் மற்றும் நேவி செயலிகள் வாயிலாக டிக்கெட் எடுத்தால், ஒரு ரூபாய் கட்டணம்தான்.
பஸ், மின்சார ரயிலிலும் பயணிப்போரும் இந்த சலுகையை பெறலாம். இந்த சலுகையை, ஒரு டிக்கெட்டுக்கு ஒரு முறை மட்டும்தான் கிடைக்கும்.
Tags: தமிழக செய்திகள்

