Breaking News

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மழை பெய்யும் மாவட்டங்கள் இதுதான்

அட்மின் மீடியா
0

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி  அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மழை பெய்யும் மாவட்டங்கள் இதுதான்


வங்கக் கடலில் அக்.21ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா கூறுகையில்:-

ஆழ்க்கடலில் உள்ள மீனவர்கள் 21 தேதி காலைக்குள் கரைக்கு திரும்ப வர வேண்டும். அடுத்த ஐந்து நாட்களுக்குச் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வாய்ப்பு உள்ளதால் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகள், அதேபோல் அரபிக் கடல் பகுதியில் கேரள கர்நாடகா பகுதிகள் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமும் 21 தேதியில் இருந்து அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமும் உருவாக கூடும். 

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்தால் தமிழகத்திற்கு அதீத கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இடி, மின்னுடன் கூடிய மழைமேகம் உருவாக வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும். இடி மின்னல் உள்ளிட்ட சத்தங்கள் கேட்கும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

குறிப்பாக மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். 

தீபாவளி பண்டிகை அன்று சென்னைக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தீபாவளி தினத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் குறிப்பாக நீலகிரி, கோவை,தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்:-

21-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னதுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருவள்ளூர், சென்னை, விழுப்பரம் செங்கல்பட்டு, கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னதுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளுர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்பரம், இராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி கிருவண்ணாமலை, திருப்பத்தார், வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாளர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் உன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி. விழப்புரம். திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் எனமனழயும் பெய்யவாய்ப்புள்ளது.

24-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கணமழையும் சென்னை, வாஞ்சிபுரம், இராணிப்பேட்டை திருவண்ணாமலை, ஈரோடு, நீவகிரி கோயம்புத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

25-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக மாவட்ட மலைப்பகுதிகள் ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. கனமழையும், கோயம்புத்தார் சேலம் மாவட்டங்களில் ஓரிரு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback