Breaking News

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் - எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
 அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக இபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுகவில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க EPS-க்கு, செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்திருந்த நிலையில், திண்டுக்கல்லில் 7 Ex அமைச்சர்களுடன் EPS ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்திற்கு பிறகு செங்கோட்டையனை நீக்கி அறிவித்துள்ளார்.

அடுத்தடுத்து.. செங்கோட்டையனைத் தொடர்ந்து அவரது ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரின் கட்சிப் பொறுப்புகளையும் பறித்தார் எடப்பாடி பழனிசாமி 

கே.ஏ. சுப்பிரமணியன், ஈஸ்வரமூர்த்தி, குறிஞ்சிநாதன், தேவராஜ், வேலு, ரமேஷ் மற்றும் மோகன்குமார் ஆகியோரின் பதவிகளைப் பறித்து நடவடிக்கை

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback