Breaking News

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் ஸ்டாலின் ஆட்சி வெளியான கருத்துக்கணிப்பு முடிவு

அட்மின் மீடியா
0

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் ஸ்டாலின் ஆட்சி வெளியான கருத்துக்கணிப்பு முடிவு 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. 

திமுக கூட்டணி, (காங்கிரஸ்,விடுதலை சிறுத்தை,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,மதிமுக, இ.கம்யூனிஸ்டு,மா.கம்யூனிஸ்டு , மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,மற்றும் மக்கள் நீதி மய்யம்)

அதிமுக - பாஜக கூட்டணி, 

புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக்கழகம்

சீமானின் நாதக, 

தேமுதிக, 

பாமக 

என அனைத்துக்கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்வது, களப்பணியாற்றுவது எனத் தீவிரமாகத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். 

இதுஒருபுறமிருக்க முன்னணி ஊடக மற்றும் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை தொடங்கியுள்ளன. 

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் என்ன நடக்கும், எந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் வம்சி சந்திரன் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.

Final numbers of my first round of analysis of 234 seats. Dmk+: 154(126+28) Comfortable position - 126 Close fight with an edge - 28 Admk+: 80(48+32) Comfortable position - 48 Close fight with an edge - 32

The actual fight is the 60 close fight seat(32+28) that can go either ways

தற்போது நிலவும் அரசியல் நிலவர கணிப்பின்படி 

திமுக கூட்டணி 154 இடங்களில் வெற்றி பெறும் இதில் 126 தொகுதிகளில் உறுதியான வெற்றியைப் பெறும்  எனவும் 28 தொகுதிகளில் இழுபறியான போட்டி இருக்க வாய்ப்பு உள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது

அதிமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலை பெற்று 48 தொகுதிகள் வெற்றி பெரும் எனவும் மீதமுள்ள 32 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் எனவும் ஆனால் 80 தொகுதியில் வெற்றிக்கு வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது

மொத்தம் 60 தொகுதிகளில் (திமுக கூட்டணிக்கு 28, அதிமுக கூட்டணிக்கு 32) கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தத் தொகுதிகளின் முடிவுகள் எந்தப் பக்கமும் மாறக்கூடும் என்பதால், அவை தேர்தல் முடிவுகளில் முக்கியப் பங்காற்றும். 

தமிழக வெற்றிக் கழகம் எத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்று வம்சி சந்திரன் தனது கணிப்பில் குறிப்பிடவில்லை.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback