மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மேலாளார் - பீப் திருவிழா நடத்திய வங்கி ஊழியர்கள்..வைரலாகும் வீடியோ
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கியில் பீகாரை சேர்ந்த ஒருவர் வங்கியின் பிராந்திய மேலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு இவர் வங்கி கேன்டீன் மற்றும் அலுவலகத்துக்குள் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தார். மேலாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (BEFI) ஊழியர்கள் "மாட்டிறைச்சி திருவிழா" கொண்டாடினர்
ஊழியர்கள் அலுவலகத்திற்கு வெளியே மாட்டிறைச்சி மற்றும் பரோட்டா சாப்பிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இ
சங்கத் தலைவர் எஸ்.எஸ்.அனில் கூறுகையில், "இங்கு ஒரு சிறிய கேன்டீன் உள்ளது. அதில் குறிப்பிட்ட நாட்களில் மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது. இனி மாட்டிறைச்சி பரிமாறக் கூடாது என்று மேலாளர் கேன்டீன் ஊழியர்களிடம் கூறினார்.
இந்த வங்கி அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறது.உணவு என்பது தனிப்பட்ட விருப்பம். இந்தியாவில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உணவு உண்ண உரிமை உண்டு. நாங்கள் யாரையும் மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்தவில்லை. இது வெறுமனே எங்கள் போராட்டத்தின் ஒரு வடிவம்" என்றார்.
வீடியோ பார்க்க இங்கு கீளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1961994198485467418
Tags: இந்திய செய்திகள்