Breaking News

சாலையின் குறுக்கே வந்த நாய் - பைக்கில் மோதி விபத்து பறிபோன இளைஞர் உயிர் பதறவைக்கும் வீடியோ

அட்மின் மீடியா
0

சாலையின் குறுக்கே வந்த நாய் - பைக்கில் மோதி விபத்து பறிபோன இளைஞர் பதறவைக்கும் வீடியோ

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட டிவிஎஸ் சண்முகா நகரை சேர்ந்த பிரசாந்த் (26) என்ற இளைஞர் தனது ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு எலக்ட்ரீசியன் பணி செய்து வரக்கூடிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்கோட்டை பல்லவன்குளம் பகுதியில் எலக்ட்ரீசியன் பணி முடித்துவிட்டு அன்று காலையில் டிவிஎஸ் கார்னரிலிருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது 

சாலையின் குறுக்கே சென்ற நாயால் விபத்துக்குள்ளாகி இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சாலையில் படுகாயமடைந்து கிடந்த பிரசாந்தை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தலையில் பலத்த காயமடைந்த பிரசாந்த் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1962537309263540705

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback