Breaking News

மின்சார வாரியத்தில் 1794 கள உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் TNPSC அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மின்சார வாரியத்தில் 1794 கள உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்  TNPSC அறிவிப்பு



தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க TNPSC அழைப்பு. இன்று முதல் வரும் அக். 02ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

வரும் நவம்பர் 16ம் தேதி காலை தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பிற்பகல் தொழிற்பிரிவுத் தேர்வு நடக்க உள்ளது

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்‌ தேர்வு (தொழிற்பயிற்சி நிலை) 2025 குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

சென்னை,தமிழ்நாடு மின் வாரியத்தில் கள உதவியாளர் வேலைக்கு 1794 காலி இடங்களுக்கு போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இடங்களுக்கு இன்று முதல், அக். 2ஆம் தேதி வரை இரண்டாம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மின்‌ பகிர்மானக்‌ கழகத்தில்‌ உள்ள ௧ள உதவியாளர்‌ பதவிக்கான 1794 காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்‌ தேர்வு (தொழிற்பயிற்சி நிலை)- 11க்கான அறிவிக்கை இன்று (03.09.2025) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள்‌ 03.09.2025 முதல்‌ 02.10.2025 வரை இணையவழியில்‌ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்‌. அக்டோபர் 6 முதல் 8ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். தேர்வர்கள்‌ தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் யுபிஐ மூலமாகவும்‌ செலுத்தலாம்‌. 

இந்தத் தேர்வு நவம்பர் மாதத்தில் நடக்கிறது. 16.11.2025 முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகலில்‌ கணினி மூலம் இந்தத் தேர்வு நடைபெறும்‌ என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய குழுமத்தினால் வழங்கப்படும் பின்வரும் ஏதேனும் ஒரு தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்றிதழ்/ தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

மின் பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது சிறப்புத் திட்டத்தின்கீழ் மின்னியல் தொழில் பிரிவு படித்தவர்கள் விண்ணப்பிக்காலம்.https://tnpsc.gov.in/Document/tamil/13_2025_CTS_II_DIPLOMA_TAMIL_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, அறிவிக்கையைக் காணலாம்.

கல்வித்தகுதி மற்றும் தொழில்நுட்பத் தகுதி:

கள உதவியாளர் பணிக்கு 

தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுமத்தினால் வழங்கப்படும் பின்வரும் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் / தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்

மின்பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது சிறப்புத் திட்டத்தின் கீழ் மின்னியல் தொழிற்பிரிவு

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://tnpsc.gov.in/Document/tamil/13_2025_CTS_II_DIPLOMA_TAMIL_.pdf 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback