கொடிக் கம்பங்களை அகற்றக்கோரிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!
கொடிக் கம்பங்களை அகற்றக்கோரிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!
தமிழ்நாடு முழுவதும் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்கிற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பகரங்களை அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது
வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நான்கு வார காலத்திற்குள் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்றும் அப்போது நீதிபதிகள் விரிவாக விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்