மல்லை சத்யா மதிமுகவிலிருந்து நீக்கம் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா சஸ்பெண்ட் - வைகோ அறிவிப்பு
மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக வைகோ அறிவிப்பு.
மதிமுகவில் துரை வைகோ முன்னிலைப் படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார் மல்லை சத்யா.
கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைகோ அறிவித்துள்ளார்.
துரை வைகோ - சத்யா இடையே முரண்பாடு எழுந்தபோது, சத்யாவை 'துரோகி' என வைகோ குறிப்பிட்டார். இதற்கு எதிராக அவர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.