Breaking News

இன்று முதல் தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு ரயில்வே வாரியம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இன்று முதல் தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு ரயில்வே வாரியம் அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகை தொடர் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. 


இந்தாண்டு திங்கள்கிழமை வருவதால், முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் செல்வார்கள்.அதன்படி, வரும் அக். 16 (வியாழன்) அன்று செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இணையதளம் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் இன்று(ஆக. 17) காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெறுகிறது.

தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாளான அக்.19-க்கான ரயில் முன்பதிவு புதன்கிழமையும் (ஆக. 20), தீபாவளி நாளான அக்.20-க்கான முன்பதிவு வியாழக்கிழமையும் (ஆக. 19) தொடங்கவுள்ளது.

ரயில்களில் அக்டோபா் 13 முதல் 26-ஆம் தேதி வரை சொந்த ஊா் செல்வதற்கான பயணச் சீட்டை முன்பதிவு செய்து, அதே ரயிலில் நவம்பா் 17 முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை ஊா் திரும்புவதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்பவா்களுக்கு கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.

இதற்கான கட்டண சலுகை பயணச்சீட்டை வரும் 14-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback