Breaking News

பலத்த காற்றால் திடீரென சரிந்து விழுந்த கட் அவுட் - நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி

அட்மின் மீடியா
0

பலத்த காற்றால் திடீரெனச் சரிந்து விழுந்த கட் அட்வுட் - நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி



திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கத்தில் சாலையின் குறுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்தது. எடப்பாடி பழனிசாமி வாகனம் சென்ற சில வினாடிகளில் சரிந்ததால் தப்பினார்.

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சி பேரணியை மேற்கொண்டுள்ளார். தொகுதி வாரியாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார்.

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி சாலையின் இரண்டு பக்கத்திலும் கொடிகள் கட்டப்பட்டிருந்தது.  சாலையின் குறுக்கே பேனர் வைக்கப்பட்டிருந்தது. 

எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பேருந்து இந்த வரவேற்று பேனரை கடந்தபோது திடீரெனப் பலத்த காற்றால் திடீரென அந்தப் பேனர் சரிந்து சாலையில் விழுந்தது. பேருந்து கடந்த நிலையில் பேனர் விழுந்ததால், நூலிழையில் தப்பினார். 

இதில் எடப்பாடி பழனிசாமியின் பேருந்துக்குப் பின்னால் வந்த வாகனங்கள்மீது பேனர் விழுந்தது. இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி தனது வாகனத்தை உடனே நிறுத்திப் பேனர் விழுந்த இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்:-

https://x.com/bbctamil/status/1956714213436510565

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback