நிச்சயிக்கப்பட்டபின் திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு - 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை காதலன் கைது
திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தர்ஷன். 26 வயதான இவர், பாரிமுனையில் ஹார்டுவேர்ஸ் டீலர்ஷிப் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கும், ராயபுரம் புதுமனைக்குப்பம் கல்மண்டபம் ரோடு பகுதியில் வசித்து வந்த மாற்றுத்திறனாளியான ஹர்சிதா என்ற 25 வயது இளம்பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் தர்ஷனும், ஹர்சிதாவும் எப்போதும் போலப் பேசிப் பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தர்ஷன் ஹர்சிதாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நீ எனக்கு வேண்டாம். உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி உள்ளார்.
இதைக்கேட்டுஅதிர்ச்சியடைந்தஅவர்பெற்றோர்கள், உறவினர்களுடன் வேப்பேரியில் உள்ள தர்ஷனின் வீட்டில் வைத்து இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போதும் தர்ஷன் மனம் மாறாமல் ஹர்சிதாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி உள்ளார்.
இதனால் மனமுடைந்த ஹர்சிதா 7-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வேப்பேரி போலீசார் காதலியைத் திருமணம் செய்ய மறுத்த காதலன் தர்ஷனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்