Breaking News

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

காசாவில் தாக்குதல் நடைபெற்ற மருத்துவமனையில் மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!


காஸா மருத்துவமனைமீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகருக்குட்பட்ட நாஸர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் ராணுவம் இரு முறை தொடர்ந்து இன்று (ஆக. 25) தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் 4 வது தளத்தில் இருந்தவர்கள் கொல்லப்பட்டதாகவும் காஸா குடிமக்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில், ராய்ட்டர்ஸ், அசோசியேடட் பிரஸ், அல் ஜஸீரா போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் உயிரிழந்ததாகப் பாலஸ்தீன சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

கடந்த 22 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவத்துக்கும் காஸாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.இதில், காஸாவின் முக்கிய மருத்துவமனையாக உள்ள நாஸர் மருத்துவமனைமீது இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

அங்குப் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாலஸ்தீனம் தரப்பில் கூறப்படுகிறது.நான்காவது மாடியின் மீது இரண்டு முறை வான்குதாக்குதல் நடத்தியுள்ளது. முதன்முறையாகத் தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை பலத்த சேதம் ஏற்பட்டது. மீட்புக்குழு மீட்புப் பணிக்காக வந்த நிலையில், மற்றொருமுறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் 62,686 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்  இஸ்ரேல் ஹமாஸ் போரில் இதுவரை 240 க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;_

https://x.com/SparkMedia_TN/status/1959996487733293073

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback