தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு
தேசிய நல்லாசிரியர் விருதுகள் அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு
மயிலாப்பூர் பிஎஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள பாரதியார் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதைமுன்னிட்டு, ஆண்டுதோறும் நாட்டின் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அதன்படி, நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான 45 ஆசிரியர்கள் கொண்ட பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பிஎஸ் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகை செப்.5ம் தேதி வழங்கப்படும்.
Tags: தமிழக செய்திகள்