Breaking News

இறந்தவர்களின் ஆதார் எண்ணை நீக்கம் செய்ய புதிய வசதி அறிமுகம் - நீக்கம் செய்வது எப்படி முழு விவரம்

அட்மின் மீடியா
0

இறந்தவர்களின் ஆதார் எண்ணை நீக்கம் செய்ய புதிய வசதி அறிமுகம் - நீக்கம் செய்வது எப்படி முழு விவரம் New facility introduced to delete Aadhaar number of deceased - Full details on how to delete

உயிரிழந்தவர்களின் பெயர் ஆதாரில் இருந்து நீக்க புதிய வசதியை ஆதார் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஆதார் சேவையில் உள்நுழைவு மூலம் லாகின் செய்தால் அதில் ''இறந்த குடும்பத்தினர் குறித்து தகவல் தெரிவிக்கவும்'' என்ற புதிய பகுதி உள்ளது. 

அதில் சென்று எந்த மாநிலத்தில் அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அவருடைய ஆதார் எண், இறப்பு சான்றிதழில் உள்ள இறப்பு பதிவு எண், இறப்பு சான்றிதழில் உள்ள அவரது பெயர், பாலினம், இறப்பு தேதி ஆகியவற்றை பதிவு செய்து அவரது இறப்பு சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அடுத்து இறந்தவருக்கு விண்ணப்பம் செய்பவர் யார் என்ற தகவலை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதனை பரிசீலனை செய்து அவரது பெயர் ஆதாரில் இருந்து நீக்கப்படும். 


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback