தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
TMBSP பொறிக்கப்பட்ட நீல நிற கொடியில் யானையின் தும்பிக்கையில் பேனா இருப்பதுபோல் கொடி வடிவமைப்பு
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி சென்னையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சென்னைக்கு அருகில் உள்ள பொத்தூரில் அவரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது மேலும் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணியும் நடைபெற்றது
இந்நிலையில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயருடன் புதிய கட்சியை தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி.
அதன் கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கட்சியின் சின்னத்தில் யானையில் பேனா வைத்திருப்பது போல் உள்ளது.
Tags: அரசியல் செய்திகள்