Breaking News

இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா?காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

அட்மின் மீடியா
0

 இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா?காவல்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

பாலியல் வன்கொடுமை வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் கூறுகையில், நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? 

மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை போலீசார் அருவருக்கத்தக்க வகையில், அலட்சியமாக நடத்துகின்றனர். சட்டத்தில் உள்ளதை செய்ய மறுத்து போலீசார் தெனவாட்டாடாக செயல்படுகின்றனர் ' என தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback