Breaking News

மக்களை திசைதிருப்பக் கூடிய பதஞ்சலி விளம்பரத்துக்கு தடை- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

மக்களை திசைதிருப்பக் கூடிய பதஞ்சலி விளம்பரத்துக்கு தடை- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு


டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து குறித்து அவதூறு பரப்பும் வகையில், விளம்பரங்களை வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக டாபர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

டாபர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், பதஞ்சலியின் விளம்பரங்கள் டாபரின் தயாரிப்பை அவதூறாக சித்தரித்ததாகவும், அவற்றில் 47 ஆயுர்வேத மருந்துகள் மட்டுமே உள்ளன என்றும், பதஞ்சலியின் தயாரிப்பில் 51 மருந்துகள் உள்ளதாகவும் ஒப்பீடு செய்து மக்களை தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று தொடங்கியது. பின்னர் நீதிமன்றம் பதஞ்சலி ஆயுர்வேதத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. டாபர் நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் கோரியது. நோட்டீஸ் பெற்ற பிறகும், பதஞ்சலி ஆயுர்வேதா கடந்த சில வாரங்களில் 6,182 முறை விளம்பரங்களைக் காட்டியதாக டாபர் நிறுவனம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விளம்பரங்களில் தவறான தகவல்கள் கொடுக்கப்படுவதாக டாபர் கூறுகிறது. பதஞ்சலி தனது தயாரிப்பு 51க்கும் மேற்பட்ட மூலிகைகளால் ஆனது என்றும், அதில் 47 மூலிகைகள் மட்டுமே உள்ளன என்றும் கூறுகிறது. 

பதஞ்சலி இதன் மூலம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதாக டாபர் கூறுகிறது.டாபரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் அத்தகைய விளம்பரங்களைக் காட்டுவதை உடனடியாகத் தடை செய்து, நீதிபதி மினி புஷ்கர்ணா இந்த இடைக்கால உத்தரவை வழங்கினார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback