Breaking News

தமிழக வெற்றிக்கழக ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழக ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.பாஜக, திமுக, திரிணமூல் என பெரும்பாலான கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல்களில் தேர்தல்களை வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் பிகாரில் 'ஜன் சுராஜ்' என தனிக்கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்கவிழாவில் பிரசாந்த் கிஷோர் கலந்துகொண்டார். தவெகவின் சிறப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் பிகார் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதால் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து சில காலம் விலகுவதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.பிகார் பேரவைத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும் தேர்தல் முடிந்தபின்னர் அதாவது நவம்பருக்குப் பிறகே தவெக ஆலோசகராக மீண்டும் செயல்படுவது பற்றி முடிவெடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback