ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் சரண் செய்து பணப் பயன் பெறலாம் - தமிழக அரசு அரசாணை
ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் சரண் செய்து பணப் பயன் பெறலாம் - தமிழக அரசு அரசாணை
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறுதல் தொடர்பாக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பரவலின் போது, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் நடைமுறை 27.4.2020 முதல் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கை.இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறுவது மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்.
இதன்படி அக்டோபர் 1-ந் தேதி முதல் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறலாம்.மேலும் ஈட்டிய சரண் விடுப்பை பெறுவதற்கான தகுதி தொடர்பாகவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் பணியில் சேர்ந்திருந்தால் அக்டோபர் 1-ந் தேதியில் இருந்தும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணியில் சேர்ந்து இருந்தால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்தும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணியில் சேர்ந்தால் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்தும் ஈட்டிய சரண் விடுப்பைப் பெறுவதற்கு தகுதி உண்டு.ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் பணி நியமனம் பெற்றவர்கள் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெற முடியும்.
2020-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பணியில் சேருவோருக்கு மட்டும்தான் 3 மாத சுழற்சி முறை ஈட்டிய சரண் விடுப்பு திட்டம் பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்