ஹராமான செஸ் விளையாட்டுக்கு ஆப்கானிஸ்தானில் தடை தாலிபான் அரசு அறிவிப்பு Taliban bans chess in Afghanistan, calls it against Sharia
ஆப்கானிஸ்தான் நாட்டில் செஸ் விளையாடுவதற்கு காலவரையற்ற தடை விதித்துள்ளது தாலிபான் அரசு. Taliban bans chess in Afghanistan, calls it against Sharia
இஸ்லாமிய ஷரியாவின் கீழ் செஸ் விளையாட்டு சூதாட்டத்தின் ஒரு வடிவம் என விளக்கம் அளித்துள்ளார் அந்நாட்டு விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி.
இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.
இது நாட்டின் "நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது.
சதுரங்கத்திற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ளன.இந்த ஆட்சேபனைகள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்" என்று கூறினார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றதிலிருந்து கலாச்சார, சமூக மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் போக்கைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அலி இப்னு அபி தாலிப் (ரலி) அவர்கள் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்த சிலரைக் கடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அவர், "நீங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கும் இந்த உருவங்கள் எவை? அல்-அன்பியா 21:52]" என்று கேட்டார். இமாம் அஹ்மத் கூறினார்: "சதுரங்கம் பற்றிய மிகச் சிறந்த கருத்து 'அலி (ரலி) அவர்கள் கூறியதுதான்."அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சதுரங்கம் பற்றிக் கேட்கப்பட்டது, அவர், "அது பகடையை விட மோசமானது" என்றார்.து.