Breaking News

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் முன்னின்று நடத்திய இந்திய ராணுவத்தின் சிங்கப் பெண்கள் முழு விபரம் இதோ sofia qureshi

அட்மின் மீடியா
0

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் முன்னின்று நடத்திய இந்திய ராணுவத்தின் சிங்கப் பெண்கள் முழு விபரம் இதோ sofia qureshi



ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் மே 7ஆம் தேதி அதிகாலை 1.44 மணிக்கு பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ''ஆபரேஷன் சிந்தூர்'' என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் 9 இலக்குகள் மீது இந்தியா குறிவைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இது குறித்து இன்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்திய இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி உடன் இந்திய ராணுவத்தின் ‘லெப்டினன்ட் கர்னல்’ சோஃபியா குரேஷி மற்றும் இந்திய விமானப்படையின் ‘விங் கமாண்டர்’ வ்யோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கினர்.

பஹல்காம் தாக்குதலின் போது பெண் ஒருவரை உயிருடன் விட்டு மோடியிடம் நடந்ததைக் கூறுங்கள் எனத் தீவிரவாதிகள் கூறிய தகவலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த இரு பெண் அதிகாரிகளை வைத்து விளக்கியதாகவும் கூறப்படுகிறது.

கர்னல் சோபியா குரேஷி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. 

9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் எந்த இராணுவ நிலையையும் குறிவைக்கவில்லை. மேலும் இதுவரை பாகிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை. 

பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத தளமான சுபன் அல்லா, ஜெய்ஷ் - இ- முகமதுவின் தலைமையகம், இந்திய ஆயுதப் படைகளால் குறிவைக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக, இந்திய ஆயுதப் படைகளால் முறையே 9 கி.மீ. மற்றும் 13 கி.மீ. தொலைவில் உள்ள மர்காஸ் அஹ்லே ஹதீத், பர்னாலா மற்றும் மர்காஸ் அப்பாஸ், கோட்லி ஆகிய இடங்கள் குறிவைக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் சிக்னல்ஸ் படைப்பிரிவின் அதிகாரி தான் கர்னல் சோபியா குரேஷி. 

குஜராத்தைச் சேர்ந்த இவர் உயிர் வேதியியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். ஒரு ராணுவ குடும்பத்தைச் சேர்ந்த அவர், இந்திய ராணுவ அதிகாரியை மணந்தார்.

மார்ச் 2016 இல், பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் ராணுவப் படையை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார்.

பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப்படைக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்குரிய சோபியா குரேஷி, 2006 ஆம் ஆண்டு காங்கோவில் நடைபெற்ற ஐ.நா அமைதிப்படையில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் பங்கேற்றார்.

விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. 

9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. பொதுமக்கள் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதையும், பொதுமக்கள் உயிர் இழப்பதையும் தவிர்க்கும் வகையில் இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன” எனப் பேசினார். 

2019 ஆம் ஆண்டு விமானப்படையின் ஹெலிகாப்டர் விமானியாக இணைந்த இந்த வியோமிகா சிங் வானில் 2,500க்கும் அதிகமான மணி நேரம் பறந்து சாதனை படைத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தொடங்கி இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் உள்ள சவாலான நிலப்பரப்புகளில் ஹெலிகாப்டர்களை திறம்பட இயக்கிய பெருமைக்குரிய வியோமிகா சிங், 2020 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் வெள்ள காலத்தில் மக்களை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback