Breaking News

கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் SC/ST தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்க முடியாது - நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் SC/ST தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்க முடியாது - நீதிமன்றம் உத்தரவு

ஆந்திராவில் பாஸ்டராக பணியாற்றிய சிந்தாடா ஆனந்த், அக்கலா ராமிரெ மற்றும் மற்றவர்கள் தனது சாதியை அடிப்படையாகக் கொண்டு துன்புறுத்தியதாக சாண்டோலு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் SC/ST தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இதனை எதிர்த்து, ராமிரெட்டி மற்றும் மற்றவர்கள், இந்த வழக்கு செல்லாது எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 

கிறிஸ்தவ மதத்தில் மதம் மாறியவுடன், அவர் SC/ST வகுப்பு அந்தஸ்தை இழக்கிறார் எனவும் இதனால், SC/ST சட்டத்தின் கீழ் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்காது என நீதிபதி கூறினார்கள்

மேலும் சிந்தாடா ஆனந்த் வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் SC சான்றிதழ் வைத்துள்ளவர் என வாதிட்டார். ஆனால் நீதிபதி ஹரிநாத், கிறிஸ்தவ மதத்திற்க்கு மாறியவுடன் SC/STஅந்தஸ்து தானாகவே முடிவடைகிறது என நீதிபதி தெரிவித்தார்.

புகார்தாரர் ஒரு போதகராகவும், பாஸ்டர்ஸ் பெல்லோஷிப்பின் பொருளாளராகவும் தீவிரமாகப் பணியாற்றியது அவரது கிறிஸ்தவ நம்பிக்கையை உறுதிப்படுத்தியது என்பதைக் குறிப்பிட்டது. அவரது மனைவி உட்பட சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதை ஆதரித்தன, இதனால் அவர் எஸ்சி அந்தஸ்தைப் பெற முடியாது என்று நீதிமன்றம் முடிவு செய்தது. 

பாஸ்டர் ஆனந்த் SC/ST சட்டத்தை தவறாக பயன்படுத்தி போலி புகார் அளித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், போலீசார் ஆனந்தின் மத மற்றும் சாதி நிலையை சரிபார்க்காமல் வழக்கு பதிவு செய்தது தவறு என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.இதையடுத்து, ராமிரெட்டி மற்றும் மற்றவர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback