புதிய போப்-ஆக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு! New Pope
புதிய போப்-ஆக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு!
புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவதை குறிக்கும் வாடிகனில் உள்ள கார்டினால்கள் சிஸ்டைன் தேவாலய புகைக்கூண்டில் வெள்ளை நிறப் புகை வெளியேற்றப்பட்டது
கத்தோலிக்க திரு அவையில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார், புதிய போப் அமெரிக்காவின் ராபர்ட் பிரீவோஸ்ட். இவர் வரலாற்றில் முதல் அமெரிக்க போப்பாண்டவர் ஆவார்.
தமிழில் போப் லியோ xiv என்று அழைக்கப்படுவார்.
கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 88, இத்தாலியின் வாடிகன் சிட்டியில் ஏப்.,21ல் காலமானார். அவரது இறுதிச் சடங்கு செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது.
போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியது.
இந்நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தில் வெண்புகை வெளியிடப்பட்டுள்ளது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை கத்தோலிக்க கிறிஸ்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன
Tags: வெளிநாட்டு செய்திகள்