பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்திய இந்தியா முழு விவரம் India Pakistan War
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூரில் இந்திய ராணுவம் தாக்குதல்
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் ஆபரேஷனை நடத்தி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அங்கிருந்த ஒன்பது பயங்கரவாதி முகாம்களை அழித்தது.
இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையோர கிராம மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 16 பேர் வரை பலியாகியுள்ளனர்.
மேலும், நேற்று இரவு இந்திய எல்லையோர நகரங்களில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.இந்த அனைத்து தாக்குதலையும், இந்தியா ராணுவம் முறியடித்தது என இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இதனை உறுதி செய்தார்.
இந்நிலையில், இந்தியா முதல் முறையாக S 400 வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிப்பு. இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா மற்றும் அர்னியா உள்ளிட்ட இடங்களில் 12க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் அத்தனை ஏவுகணைகளும் இடை மறித்து இந்திய ராணுவத்தால் அழித்துள்ளது
பாகிஸ்தானின் லாகூர் நகரத்தின் மீது இந்தியா பதிலடித் தாக்குதல் .இந்திய எல்லை மாநிலங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் பாகிஸ்தானின் முக்கிய நகரத்தின் மீது இந்தியா பதிலடி கொடுத்துள்ளது
Tags: இந்திய செய்திகள்