இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு india pak cease fire
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு சம்மதம்; உடனடியான முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த முடிவை அறிவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது; போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட இரு நாடுகளின் அறிவார்ந்த செயலை பாராட்டுகிறேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து நிலம், வான், கடல் என அனைத்து விதமான தாக்குதல்களையும் மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் போராக கருதப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய அரசு, மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்