Breaking News

CBSE பள்ளிகளில் 5 ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் - அமலுக்கு வந்த நடைமுறை

அட்மின் மீடியா
0

CBSE பள்ளிகளில் 5 ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் - அமலுக்கு வந்த நடைமுறை




சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் 'ஃபெயில்' என்ற நடைமுறை அமலுக்கு வந்தது!

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை, 'பெயில்' ஆக்கக்கூடாது  ஆல் பாஸ் என்ற நடைமுறை இதுவரை அமலில் இருந்தது.

இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை 2020ல், அந்த விதி திருத்தப்பட்டது. அதன்படி, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில், தேர்ச்சி சதவீதத்தை விட குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை, 'பெயில்' ஆக்கலாம். இந்த நடைமுறை, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு அமலுக்கு வந்துள்ளது. 

ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால் இந்த முறை அடுத்த ஆண்டில் இருந்துதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது

இந்நிலையில் எங்கள் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிக்கிறேன்' என, பெற்றோரிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன என தகவல் வெளியாகி உள்ளது.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback