Breaking News

அரசு இசைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களும் முறையான இசைக்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கிலும், நமது நாட்டிலும் மற்றும் அயல்நாடுகளில் இசை. நாடனத்திற்கென ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளும் அனைத்து மாவட்ட மக்களுக்கும் சரிசமமாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் மாவட்டம் தோறும் இசைப்பள்னீகள் தமிழக அரசினால் தொடங்கப்பட்டது.



கலை மண்பாட்டுத்துறையின் கீழ் தமிழ்நாட்டில் தற்போது 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் பயில்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இசைக்கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு அரசு இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்த தற்பொழுது மாதந்தோறும் கல்வி உதவித்தொகை ரூ. 400/- வழங்கப்பட்டு வருகின்றது.

இசைக்கல்வியினை தமிழகமெங்கும் பரவலாக்கும் பொருட்டும், இளைய சமுதாயத்தினரிடையே இசைக்கல்வியில் ஆர்வத்தினை ஏற்படுத்திடவும், மாணவர்களை புகழ்மிக்க இசைக்கலைஞர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் தமிழக அரசால் மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. 

குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளுடன் 1997 ஆம் ஆண்டு திருவாரூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் 1998 ஆம் ஆண்டு கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் 1999 ஆம் ஆண்டு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சீர்காழி (நாகப்பட்டினம்) கிருஷ்ணகிரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் 2000 ஆம் ஆண்டு ஈரோடு மற்றும் இராமநாதபுரம் என 17 மாவட்டங்களில் அரசு இசைப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. 2007-2008 ஆம் ஆண்டில் வயலின், மிருதங்கம் ஆகிய பாடப்பிரிவுகள் கூடுதலாக தொடங்கப்பட்டன.

மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுகள் இசைப்பள்ளி அளவில் நடத்தப்படும். மூன்றாம் ஆண்டில் இறுதித் தேர்வு அரசு தேர்வுத்துறையால் முதன்மைப் பாடம், துணைப்பாடம், வாய்மொழித்தேர்வு ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

வயது வரம்பு:-

12 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:-

குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் சேருவதற்கு 

7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

நாதஸ்வரம், தவில், தேவாரம் பிரிவுகளில் சேர்வதற்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்.

பயிற்சிக்காலம் :-

3 ஆண்டுகள் 

ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். 

ஒவ்வொரு மாதமும் கல்வி உதவித் தொகையாக ரூ.400 வழங்கப்படும். 

இலவச பேருந்து சலுகை, குறைந்த கட்டணத்தில் ரயில் பயண சலுகை, இலவச பாடப்புத்தகம் மற்றும் அரசு விதிக்கு உட்பட்ட சலுகைகள் வழங்கப்படும்.

தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, நகராட்சி விளையாட்டு திடல், விழுப்புரம் என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். 

கூடுதல் தகவல்களுக்கு 94444 55750, 82205 65676 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://artandculture.tn.gov.in/district-government-music-schools

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback