பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி தர இந்திய ராணுவத்துக்கு முழு அதிகாரம்!
தாக்குதல் நிறுத்தத்தை மீறி இன்றும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கலாம் என இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு தலைமை தளபதி உபேந்திர திவேதி உத்தரவு
பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு அத்துமீறல் (பயங்கரவாத தாக்குதல்கள், எல்லை மீறல்கள், அல்லது ஆயுதமேந்திய தாக்குதல்கள்) செய்தாலும், இந்திய முப்படைகளுக்கு (தரைப்படை, விமானப்படை, கடற்படை) உடனடியாக பதிலடி கொடுக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தாக்குதலின் இடம், நேரம், மற்றும் முறையை (நிலம், வான், அல்லது கடல் வழியாக) தீர்மானிக்க ராணுவ தளபதிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. இதற்கு முன்கூட்டிய அரசாங்க அனுமதி அவசியமில்லை. ஏனென்றால், பிரதமர் மோடி ஏற்கனவே இதற்கு முழு அனுமதி கொடுத்துள்ள காரணத்தால் அனுமதி இல்லாமல் பதிலடி தாக்குதல் நடத்தலாம்.
பிரதமர் மோடி கொடுத்த முழு உத்தரவின் அடிப்படையில் தாக்குதல் நிறுத்தத்தை மீறி இன்றும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கலாம் என இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு தலைமை தளபதி உபேந்திர திவேதி உத்தரவு கொடுத்துள்ளார்.
சிந்துநதி நீர் ஒப்பந்தம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. எல்லைக்கு அப்பால் பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒப்பந்தம் நிறுத்தப்படும்.
ஆப்ரேஷன் சிந்தூர் முடியவடையவில்லை. இயல்புநிலையில் இருக்கிறோம். பாகிஸ்தான் சுட்டால் நாங்களும் சுடுவோம். தாக்கினால் நாங்களும் தாக்குவோம். எல்லையில் பாகிஸ்தானில் இருந்து குண்டுகள் வீசினால், இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாயும், பாகிஸ்தானுக்குள் புகுந்து, ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் விமானப்படை தளங்களை தாக்கியதே முக்கிய திருப்புமுனை என மோடி கூறினார்.
Tags: இந்திய செய்திகள்