சர்பத் ஜிகாத் விளம்பரம் சர்ச்சை : பாபா ராம்தேவ் வீடியோவை நீக்க உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம் முழு விபரம்
ஹம்டாட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனம் ரூஹ் அஃப்சா என்ற சத்துபானத்தை தயாரித்து விற்று வருகிறது. இந்த நிறுவனம் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் நடத்துகின்றார்கள்
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம் தேவ் தங்கள் நிறுவன பானத்தை விளம்பரப் படுத்த வேண்டி சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதில் பேசிய அவர், அஃப்சா பானம் விற்பனை மூலம் வரும் லாபத்தை மசூதியும் மதரசா கட்டவே பயன்படுத்துவார்கள் என பேசிய ராம்தேவ், இது லவ் ஜிகாத் போல சர்பத் ஜிகாத் என்று கூறினார்.
இந்நிலையில் ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்தை எதிர்த்து ஹம்டாட் லேப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது
பதஞ்சலி நிறுவனத்துக்கு, உடனடியாக இவ்விளம்பரங்களை வாபஸ் பெற உத்தரவிட்டது. இந்த வீடியோவை 24 மணி நேரத்துக்குள் சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டது. மேலும், இந்த நடவடிக்கையை உறுதி செய்யும் விதமாக தகவலை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது
இதன்பின் பேசிய ராம்தேவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் தொடர்பான அனைத்து அச்சு அல்லது வீடியோ வடிவ விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக இடுகைகளை உடனடியாக நீக்குவதாக தெரிவித்தார்.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 22 அன்று ஹம்தர்த் நிறுவனத்தின் புகாரின் பேரில், ராம்தேவ் தனது வீடியோக்களை நீக்கி, எதிர்காலத்தில் இத்தகைய கருத்துக்களை வெளியிடமாட்டேன் என உறுதியளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பாபா ராம்தேவ் மீண்டும் விளம்பரம் வெளியிட்டுள்ளார்
இந்த வழக்கின் விசாரணையில் உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும் பாபா ராம்தேவ் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. அவர் தனி உலகில் வாழ்கிறார் என்று நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட வீடியோவை 24 மணிநேரத்திற்குள் நீக்கவேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் நாளைக்கு இவ்வழக்கை ஒத்திவைத்து.
ரூஹ் அஃப்சா பானத்தை தயாரித்து வரும் ஹம்தர்த் நேஷனல் பவுண்டேஷன் (இந்தியா) நிறுவனம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக யுனானி மற்றும் ஆயுர்வேத மருந்துகள், எண்ணெய்கள், சிரப்கள் மற்றும் மது இல்லாத பானங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள்