Breaking News

வேளாண்மை பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 8.06.2025 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600. ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.300. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 6971 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் நிரப்பட உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, தொழில்முறை கல்வி பாட பிரிவினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஐந்து சதவீத இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசலுக்கு இட ஒதுக்கீட்டு என்று சிறப்பு இட ஒதுக்கீடுகள் பின்பற்றப்பட உள்ளது.

வேளாண்மை தகவல் தொழில்நுட்பம், உயிர் தகவலியல் என்ற இரண்டு புதிய படிப்புகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 80 மாணவர்கள் இந்த பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட உள்ளனர். ஜூன் 16 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கவுள்ளது.வேளாண்மை பல்கலைகழகம் துணை வேந்தர் நியணம் செய்ய தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது அவர்கள் பணிகளை மேற்கொள்வார்கள்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2025-26 -ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 27 இணைப்புக் கல்லூரிகளின் மூலம் இளம் அறிவியல் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, உணவு முறை, பட்டு வளர்ப்பு, வேளாண்மைப் பொறியியல், உயிரி தொழில்நுட்பவியல், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பட்டப் படிப்புகள் உள்ளன.

இதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.

மாணவ-மாணவிகள், கீழ் உள்ள லின்ங் மூலம் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பக் கட்டணத்தையும் இணையதளம் மூலமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி  08.06.2025


தேர்வு முறை: விண்ணப்பதாரர்களின் மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback