மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பாஜக நிர்வாகி கைது!
மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பாஜக நிர்வாகி கைது!
தூத்துகுடி மாவட்டம் திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி முத்து பாஜகவைச் சேர்ந்த இவர் பேஸ்புக், எக்ஸ், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கட்டெறும்பு என்ற பெயரில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இவரது எக்ஸ் தளத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது வெறுப்பையும், மத மோதல்களை தூண்டும் வகையில் இழிவுபடுத்தி சில கருத்துக்களை பதிவிட்டிருந்துள்ளார்.
இது தொடர்பான ஆதாரத்துடன் தூத்துக்குடி மாவட்டம் கொலுவை நல்லூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் தாஸ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் புகார் அளித்தார்.
இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் விசாரணை நடத்தி பாஜக பிரமுகர் கட்டெறும்பு என்ற இசக்கி முத்து மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Tags: அரசியல் செய்திகள்