Breaking News

பா.ஜ.,வுடன் கூட்டணி சேர எடப்பாடியிடம் வலியுறுத்தினேன் என கூறிய அதிமுக நிர்வாகி அப்துல் ஜபார் ஐக்கிய ஜமாத் பொருப்பில் இருந்து நீக்கம்

அட்மின் மீடியா
0

பா.ஜ.,வுடன் கூட்டணி சேர எடப்பாடியிடம் வலியுறுத்தினேன் என கூறிய அதிமுக நிர்வாகி அப்துல் ஜபார் ஐக்கிய ஜமாத் பொருப்பில் இருந்து நீக்கம் 




  • பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என நானே சொன்னேன்" எனப் பேசிய அதிமுக நிர்வாகி அப்துல் ஜபார்
  • கோவை ஐக்கிய ஜமாத் ஆட்சி மன்றக் குழு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம்.ஜபாரின் பேச்சுக்கும், ஐக்கிய ஜமாத்துக்கும் சம்மந்தம் இல்லையென்றும், ஆட்சேபகரமான பேச்சுக்கு ஜமாத் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததாகவும் நிர்வாகிகள் தரப்பில் விளக்கம்

அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில இணைச் செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார் அப்துல் ஜப்பார். இவர் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் ஆட்சி மன்றக் குழு செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். 

ஈரோடு மாவட்டத்தில்  அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ஜபார் பேசிய போது: 

நானே இ.பி.எஸ்., இடம் சொன்னேன். நம்ம இந்த தேர்தலில் பா.ஜ., உடன் தான் கூட்டணி வைக்க வேண்டும். முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள்.முஸ்லிம்கள் வந்து அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள். நான் வந்து கோவையில் பெரிய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர். நான் கண்ணால பார்த்து விட்டேன். கோவையில் வேலுமணி என்று ஒருத்தர் இருக்கிறார். அவர் வந்து முஸ்லிம்களுக்கு நிறைய காரியங்கள் செய்தார். ஆனால் யாரும் ஓட்டு போடவில்லை.

கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், நாம் பாஜ.,வோடு இல்லை. நம்ம கூட ஒரு முஸ்லிம் கட்சி இருந்துச்சு, ஆனால் அந்தக் கட்சியும் சேர்ந்து திமுகவுக்கு ஓட்டு அளித்தது. அதனால் நாம் ஏன் பாஜவை பகைக்க வேண்டும். பாஜ., உடன் கூட்டணி சேர்ந்தால் நமக்கு ஒரு பலம் வரும். ஆள் பலம், அதிகாரம் பலம் வரும். இன்றைக்கு அதிகாரம் பலம் தான் பேசுகிறது. பாஜ., உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னேன். இன்றைக்கு வைத்திருக்கிறார்கள்.

நிச்சயமாக இந்த கூட்டணி வளமான கூட்டணியாக மாறும். வளமான சக்தியாக உருவெடுக்கும். அந்த உருவெடுக்கும் சக்திக்கு நாமெல்லாம் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அவரது இந்தப் பேச்சு சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது அவர் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் ஆட்சி மன்றக் குழு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

அப்துல் ஜபாரின் பேச்சுக்கும், ஐக்கிய ஜமாத்துக்கும் சம்மந்தம் இல்லை என்றும், ஆட்சேபகரமான பேச்சுக்கு ஜமாத் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததாகவும் நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback