வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி! முழு விவரம்
வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி! முழு விவரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டவுன் பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் கண்ணதாசன்.வாணியம்பாடி கோணாமேடு பகுதியை சேர்ந்த கானா முருகன் வழக்கு தொடர்பாக கண்ணாதாசன் சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வாதாடி வந்த நிலையில், கானாமுருகன் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான நிலையில், கானா முருகனின் வழக்கில் வாதாட அவரது வழக்கறிஞர் கண்ணதாசன மறுத்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று கானா முருகன், நியுடவுன் பகுதியில் உள்ள வழக்கறிஞர் கண்ணதாசனின் அலுவலகத்திற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கானா முருகன் தான் வைத்திருந்த அரிவாளால், வழக்கறிஞர் கண்ணதாசனின் கை மற்றும் உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெட்டிவிட்டு, கண்ணதாசனின் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டார்.
பொதுமக்கள், வழக்கறிஞர் கண்ணதாசனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வழக்கறிஞர் கண்ணதாசனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய கானா முருகனை வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் விண்ணமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கானாமுருகனை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
Tags: தமிழக செய்திகள்