நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு முழு விவரம்
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம், 2019ம் ஆண்டு நடந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதைபதைக்கச் செய்தன. அந்த வீடியோவில் கல்லூரி மாணவிகளை சிலர் கைகளாலும், பெல்ட்டாலும் தாக்கி, அவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துகின்றனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் துணிச்சலாக போலீஸில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது மேலும் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்தது. இதையடுத்து, கல்லூரி மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக
சபரிராஜன், 32 வயது ,
திருநாவுக்கரசு,34 வயது ,
சதீஷ்,32 வயது ,
வசந்தகுமார்,30 வயது ,
மணிவண்ணன்,32 வயது ,
பாபு,33 வயது ,
ஹெரன்பால்,32 வயது ,
அருளானந்தம்,38 வயது ,
மற்றும் அருண்குமார்,32 வயது ,
ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இதுவரை ஒருமுறை கூட ஜாமீன் வழங்கப்படவில்லை இவர்கள் மீது, 2019ம் ஆண்டு மே, 21ல் கோவை மகளிர் கோர்ட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு 'இன்கேமரா' முறையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.
இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதம் முடிந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நந்தினிதேவியும் ஒருவர். அவர் கரூர் மாவட்ட குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். இதற்கிடையே பொள்ளாச்சி வழக்கு காரணமாக மறு உத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினிதேவி அதேகோர்ட்டில் பணி புரிவார் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தது.
இதன் காரணமாக நீதிபதி நந்தினிதேவி கோவையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.அதன்படி, மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினிதேவி இன்று (மே 13) தீர்ப்பு அளித்தார்
முன்னதாக சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒன்பது பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - தண்டனை விபரம்
1.பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.*
2. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவு.
3. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10-15 லட்சம் வரை இழப்பீட்டு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு உத்தரவு.
4.குற்றவாளிகளுக்கு விதித்த அபராதத்தையும் வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கே பிரித்து தர ஆணை.
5.வலுவான ஆதாரங்கள் இருப்பதால், மேல்முறையீடு சென்றாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும் என சிபிஐ வழக்கறிஞர் தகவல்
Tags: தமிழக செய்திகள்