Breaking News

நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைவோருக்கு தனியார் மருத்துவமனையிலும் இனி இலவச சிகிச்சை - மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சாலை விபத்தில் காயமடைவோருக்கு தனியார் மருத்துவமனையிலும் இனி இலவச சிகிச்சை- மத்திய அரசு அறிவிப்பு

Cashless treatment of road accident victims scheme 2025" என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது  இந்த திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் சிக்கிய ஒரு நபருக்கு விபத்துக்காக அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை கட்டணமில்லா சிகிச்சையைப் பெற முடியும்

இந்தத் திட்டம் தேசிய சுகாதார ஆணையம், காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதாரத்துறையிடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது

இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க 17 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இது தொடர்பான அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதில் விபத்து நடந்த முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் 

சாலைகளில் மோட்டார் வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளில் காயமடையும் எந்தவொரு நபரும், எந்தவொரு சாலையாக இருந்தாலும், இந்த திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் ஆவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலவச சிகிச்சை திட்டத்தை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழுவில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் முதல் 'நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தில் இலவச சிகிச்சை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி ஏற்படும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபா்கள், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் நீடித்துவரும் சிக்கல் தொடா்பான வழக்கை கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இத் திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டது தொடா்பான விவரத்தை மே 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டு, விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback