வெளியானது பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - முதலிடம் பிடித்த மாவட்டம் எது , தேர்ச்சி விகிதம் முழு விவரங்கள்
வெளியானது பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - முதலிடம் பிடித்த மாவட்டம் எது , தேர்ச்சி விகிதம் முழு விவரங்கள்
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 8, 2025) காலை 9:15 மணியளவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 95.03 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில்
அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் 97.98% தேர்ச்சி பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் 97.53% தேர்ச்சி பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் 97.48% தேர்ச்சி பெற்று 4ம் இடத்தை பிடித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் 97.01%தேர்ச்சி பெற்று 5ம் இடத்தை பிடித்துள்ளது.
Tags: கல்வி செய்திகள்