தி.மு.க. பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த விளக்கு கம்பம்.. நூலிழையில் தப்பிய ஆ.ராசா வைரல் வீடியோ
மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில், பலத்த காற்று காரணமாக விளக்கு கம்பம் சாய்ந்து விழுந்தது. அப்போது பேசிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த சேர்ந்த பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ ராசா இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ஆ.ராசா பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இந்த பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மேடையின் அருகே வைக்கப்பட்டு இருந்த மின்விளக்குகள் திடீரென ஆ.ராசா பேசிக் கொண்டிருந்த திசையை நோக்கி சாய்ந்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட ஆ.ராசா நொடிப்பொழுதில் அந்த இடத்தில் இருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து அந்த மின் விளக்குகள் ஆ.ராசா பேசிக் கொண்டிருந்த மைக் மீது விழுந்தது. நல்லவேளையாக சுதாரித்து விலகியதல் ராசாவுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
ஆ.ராசா பேசிக் கொண்டிருக்கும்போது மின்கம்பம் சாய்ந்து விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1919228766590767593
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ