தகாத உறவை கண்டித்ததால் காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய ஜிம் மாஸ்டர் கைது
தகாத உறவை கண்டித்ததால் மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்து மனைவி கொடூர கொலை: ஜிம் மாஸ்டர் கைது
காட்பாடியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (34). இவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சசிகலா என்பவருடன் முகநூல் மூலம் பழகி, காதலித்துக் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
பாஸ்கர் ஓசூர் ஜுஜுவாடியில் வாடகை வீட்டில் குடும்பத்தின ருடன் வசித்து வருகிறார். மேலும், இவர் ஓசூரில் 4 இடங்களில் ஜிம் நடத்தி வருகிறார். சசிகலா காமராஜ் காலனியில் பெண்களுக்கான ஜிம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், பாஸ்கருக்கும், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் தவறான நட்பு ஏற்பட்டுள்ளது. இதை சசிகலா கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 30-ம் தேதி இரவு மூக்கில் ரத்தம் வந்த நிலையில் சசிகலாவை, பாஸ்கர் தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சசிகலா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த சசிகலாவின் பெற்றோர் சசிகலாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது கழுத்தில் காயம் இருப்பதாகவும் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து, சசிகலாவின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப் பதிவு செய்து பாஸ்கரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், துப்பட்டாவால் சசிகலாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக பாஸ்கர் தெரிவித்தார். இதையடுத்து, பாஸ்கரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.
Tags: தமிழக செய்திகள்